தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோர விபத்துகளும், உயிரிழப்புகளும்

 கோர விபத்துகளும், உயிரிழப்புகளும்

 கோர விபத்துகளும், உயிரிழப்புகளும்


ADDED : ஜன 01, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா தாலுகா அரபைல் காட் பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி, 22ம் தேதி காய்கறி, பழங்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், ஹாவேரி மாவட்டம் ஷிகாவி, சவனுாரை சேர்ந்த, 10 பேர் இறந்தனர்.

 யாத்கிர் சுரபுரா பகுதியில், கடந்த பிப்ரவரி 5ம் தேதி அரசு பஸ் மோதியதில், ஒரே பைக்கில் சென்ற, 5 பேர் உயிரிழந்தனர்.

 சாம்ராஜ்நகரில் கடந்த மார்ச் 1ம் தேதி கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், இன்ஜினியரிங் மாணவர்கள், 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

 பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலையில், கோலார் மாவட்டம் பங்கார்பேட் தாலுகா குப்பஹள்ளி பகுதியில் கடந்த மார்ச் 2ம் தேதி பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகினர்.

 கலபுரகி ஜேவர்கி சொன்னா கிராஸ் பகுதியில், சுற்றுலா வேன் மீது லாரி மோதியதில், இரண்டு வயது குழந்தை உட்பட, 5 பேர் உயிர் பறிபோனது.

 பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட்டி ல் கடந்த ஜூன்மாதம், 13 ம் தேதி, ஆந்திர அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில், பஸ்சில் இருந்த, நான்கு பேர் உடல்நசுங்கி இறந்தனர்.

 மங்களூரு அருகே தலப்பாடி சோதனை சாவடி பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி, ஆட்டோ மீது கர்நாடக அரசு பஸ் மோதிய விபத்தில், ஆட்டோவில் சென்ற, 5 பேர் இறந்தனர்.

 ஹாசன் சாந்தி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தில், கன்டெய்னர் லாரி புகுந்ததில், இன்ஜினியரிங் மாணவர்கள் 5 பேர் உட்பட 10 பேர் பலியாகினர்.

 கலபுரகி ஜேவர்கியில் நவம்பர் 25 ம் தேதி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஹாந்தேஷ் பீலகி, 51, மற்றம் அவரது இரு சகோதரர்கள் பலி.

 சித்ரதுர்கா ஹரியூர் ஜவன்கொண்டஹள்ளி கிராமத்தில் ஆம்னி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி, இரு வாகனங்களும் தீப்பிடித்த வழக்கில், பஸ், லாரி டிரைவர்கள், தாய், மகள் என ஏழு பேர் இறந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us