/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தின்னர்' தீப்பிடித்ததில் தந்தையும் உயிரிழப்பு
/
'தின்னர்' தீப்பிடித்ததில் தந்தையும் உயிரிழப்பு
ADDED : ஆக 20, 2025 08:00 AM
தார்வாட் : தின்னர் பாட்டில் விழுந்து தீப்பிடித்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும் உயிரிழந்தார்.
தார்வாடின் சந்தோஷ் நகரில் வசித்தவர் சந்திரகாந்த், 35. இவருக்கு திருமணமாகி, அகஸ்தியா என்ற நான்கு வயது குழந்தை இருந்தது. இவரது வீட்டில் பெயின்டில் கலக்க பயன்படுத்தப்படும் தின்னர் பாட்டில் இருந்தது.
இம்மாதம் 15ம் தேதியன்று, குளிர் அதிகமாக இருந்ததால், வீட்டில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அப்போது குழந்தை அகஸ்தியா, தின்னர் பாட்டிலை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அது கை தவறி விழுந்து உடைந்தது. தின்னர் சிதறி தீப்பிடித்ததில் குழந்தை தீயில் சிக்கியது. குழந்தையை காப்பாற்ற முயற்சித்த சந்திரகாந்தும் காயமடைந்தார்.
படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நாளில் குழந்தை அகஸ்தியா உயிரிழந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சந்திரகாந்த் உயிரிழந்தார்.