/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
6 மாத பெண் குழந்தையை கடத்திய தந்தை கைது
/
6 மாத பெண் குழந்தையை கடத்திய தந்தை கைது
ADDED : டிச 11, 2025 05:48 AM
ராஜாஜிநகர்: குடும்ப தகராறில் மாமியார் வீட்டில் இருந்து, ஆறு மாத பெண் குழந்தையை கடத்திய, தந்தை கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ராஜாஜிநகர் 5வது பிளாக்கில் வசிப்பவர் நரேஷ் குமார், 55. இன்ஜினியர். இவரது மகன் ஷில்பிகுமார், 30. இவரது மனைவி தீபா, 27. தம்பதிக்கு ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறில் ஷில்பிகுமாரும், மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தையுடன் தனது தாய் வீட்டில் தீபா வசிக்கிறார்.
நேற்று முன்தினம் காலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற, ஷில்பிகுமார் யாரிடமும் கூறாமல் தனது குழந்தையை துாக்கி கொண்டு, தந்தை நரேஷ் குமாருடன் பைக்கில் வீட்டிற்கு தப்பி சென்றார். இதுகுறித்து தீபா அளித்த புகாரில், மாகடி ரோடு போலீசார், குழந்தையை மீட்க நேற்று முன்தினம் இரவு நரேஷ் குமார் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. குழந்தை வீட்டிற்குள் இருப்பதை உறுதி செய்த போலீசார், பூட்டை உடைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்டனர். வீட்டிற்குள் இருந்த ஷில்பிகுமார், அவரது தாய் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள நரேஷ் குமாரை போலீசார் தேடுகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை, தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

