/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்ஜினியர் கொலை நியாயம் கேட்கும் தந்தை
/
இன்ஜினியர் கொலை நியாயம் கேட்கும் தந்தை
ADDED : மே 18, 2025 08:56 PM

ஹாசன் : சிகரெட் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சஞ்சய்க்கு, ஒரு வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததாக அவரது தந்தை கண்ணீர்மல்க கூறினார்.
ஹாசனை சேர்ந்தவர் சஞ்சய், 27; சாப்ட்வேர் இன்ஜினியர். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். சிகரெட் வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில், கடந்த 10ம் தேதி சஞ்சய் சென்ற பைக் மீது, பிரதீக் என்பவர் காரால் மோதினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் கடந்த 12ம் தேதி இறந்தார். சுப்பிரமணியபுரா போலீசார் பிரதீக்கை கைது செய்து உள்ளனர்.
இந்நிலையில், சஞ்சயின் தந்தை நாராயண் நேற்று அளித்த பேட்டி:
நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். கஷ்டப்பட்டு எனது மகனை படிக்க வைத்தேன். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் வேலை செய்தார். அவர் வேலைக்கு சென்ற பின், எங்கள் குடும்ப கஷ்டம் குறைய ஆரம்பித்தது. சஞ்சய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதற்குள் அநியாயமாக இறந்து விட்டார்.
கைதான பிரதீக், துணை முதல்வர் சிவகுமாரின் கனகபுராவை தொகுதியை சேர்ந்தவர். இதனால் அவரை போலீசார் தப்ப வைத்து விட கூடாது. எங்களுக்கு நியாயம் வேண்டும். இப்படி கொலை நடந்தால், பெங்களூரில் மற்ற மாவட்டத்தினர் எப்படி நிம்மதியாக வாழ முடியும். பிரதீக் போன்றவர்களை அரசு சும்மா விட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.