தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'கஞ்சா' கலந்த சாக்லேட் விற்ற தந்தை, மகன் கைது

'கஞ்சா' கலந்த சாக்லேட் விற்ற தந்தை, மகன் கைது

'கஞ்சா' கலந்த சாக்லேட் விற்ற தந்தை, மகன் கைது


ADDED : ஜூலை 19, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா கலந்த சாக்லேட் விற்று வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பியாரேலால் என்ற ராஜு, 38. இவர் தாவணகெரே நகரின், ராம் அண்ட் கோ சதுக்கத்தில், பான் பீடா கடை நடத்துகிறார்.

இவர் சாக்லேட் பீடாவில் கஞ்சா கலந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்று வந்தார். அது மட்டுமின்றி, கஞ்சா கலந்த பீடாக்களை, தன் 15 வயது மகனிடம் கொடுத்து கல்லுாரிக்கு சென்று, விற்று வரும்படி செய்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, இது போன்று விற்று வந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை, அங்கு சென்ற தாவணகெரே நகர் போலீசார், பான் ஷாப்பில் சோதனை செய்தனர். சாக்லேட் பீடாக்களில் கஞ்சா கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து கஞ்சா கலந்த 160 சாக்லேட் பீடாக்கள், 1,115 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி., உமா பிரகாஷ் அளித்த பேட்டி:

அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், போதைப்பொருட்களை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். ராம் அண்ட் கோ சதுக்கத்தில் உள்ள பான் ஷாப்பில், கஞ்சா கலந்த சாக்லேட் பீடா விற்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று சோதனையிட்டு பறிமுதல் செய்தோம்.

சாக்லேட் பான் என்ற பெயரில் கஞ்சா விற்று வந்த ராஜுவும், அவரது சிறு வயது மகனும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். கஞ்சா கலந்த சாக்லேட்டை 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கின்றனர்.

இத்தகைய சாக்லேட்களை கல்லுாரி அருகில் கொண்டு சென்று விற்க, தன் மகனை பயன்படுத்தினார். இவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us