/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜோதிடரால் குண்டு மிரட்டல் விடுத்த பெண் இன்ஜினியர்
/
ஜோதிடரால் குண்டு மிரட்டல் விடுத்த பெண் இன்ஜினியர்
ADDED : நவ 08, 2025 11:08 PM

பெங்களூரு: காதலனை பழிவாங்க ஜோதிடர் பேச்சை கேட்டு, பெங்களூரு பள்ளிகளுக்கு, சென்னை பெண் இன்ஜினியர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் ஆறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத் ஆமதாபாத் சிறையில் இருந்த, சென்னை பெண் இன்ஜினியர் ரே னி ஜோஷில்டாவை, 30, பெங்களூரு வடக்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்த பின், அவர் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையின்போது, உயிருக்கு உயிராக காதலித்த காதலன் பிரபாகர் தன்னை கைவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ததால், அவரை பழிவாங்க ரேனி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
காதலனை பழிவாங்க, ஜோதிடர் ஒருவரின் உதவியை ரேனி நாடி உள்ளார். அவர் கொடுத்த ஆலோசனையின்படியே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்துள்ளது. ஜோதிடரிடம், போலீசார் விசாரிக்க உள்ளனர்.

