sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

எர்ணாகுளம் 'வந்தே பாரத்' ரயிலுக்கு பெங்களூரில் குமாரசாமி வரவேற்பு

/

எர்ணாகுளம் 'வந்தே பாரத்' ரயிலுக்கு பெங்களூரில் குமாரசாமி வரவேற்பு

எர்ணாகுளம் 'வந்தே பாரத்' ரயிலுக்கு பெங்களூரில் குமாரசாமி வரவேற்பு

எர்ணாகுளம் 'வந்தே பாரத்' ரயிலுக்கு பெங்களூரில் குமாரசாமி வரவேற்பு


ADDED : நவ 08, 2025 11:07 PM

Google News

ADDED : நவ 08, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: எர்ணாகுளம் - பெங்களூரு 'வந்தே பாரத்' ரயிலை, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி உற்சாகமாக வரவேற்றார்.

எர்ணாகுளம் - பெங்களூரு புதிய 'வந்தே பாரத்' ரயிலை, உத்தர பிரதேசம் வாரணாசியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். காலை 8:40 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட ரயில், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு, சேலம், கே.ஆர்.புரம் வழியாக, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு மாலை 6:03 மணிக்கு வந்தது.

பெங்களூரு ரயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' ரயிலை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., லேஹர் சிங் சிரோயா உள்ளிட்டோர், உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே ஊழியர்கள் குடும்பத்தினர், கைதட்டி ரயிலை வரவேற்று, ரயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் உற்சாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வரும் 11ம் தேதியில் இருந்து பெங்களூரு - எர்ணாகுளம் இடையே அதிகாரப்பூர்வ சேவை துவங்குகிறது.

புதன்கிழமையை தவிர மற்ற ஆறு நாட்களும் ரயில் இயக்கப்பட உள்ளது. தினமும் அதிகாலை 5:10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் 26651, மதியம் 1:50 மணிக்கு எர்ணாகுளம் செல்கிறது.

மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு 26652 இரவு 11:00 மணிக்கு, பெங்களூரு வந்தடைகிறது. பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸிகியுட்டிவ் சேர் காரில் பயணம் செய்ய 2,289 ரூபாயும், சேர் காரில் பயணம் செய்ய 1,095 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us