/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்ப்பிணியின் வயிற்றில் சிசு இறப்பு: டாக்டர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

ADDED : நவ 08, 2025 11:07 PM
கோலார்: ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டரின் அலட்சியத்தால், பெண்ணின் வயிற்றிலேயே சிசு இறந்தது. டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரிடம் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கோலார் மாவட்டம், தங்கவயல் தாலுகாவின், கோடிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் பாபு. இவரது மனைவி ரூபா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்று முன் தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டது. இவரை குடும்பத்தினர், குட்டஹள்ளி கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கர்ப்பிணியை சரியாக கவனிக்காத டாக்டர் நாகமணியும், நர்ஸ் ரித்திகாவும், 'சுகப்பிரசவம் நடக்கும்' என்றனர். ஆனால் காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை காத்திருக்க வைத்த பின், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அனுப்பினர். அங்கு செல்வதற்குள் சிசு வயிற்றிலேயே இறந்துவிட்டது.
'குழந்தையின் இறப்புக்கு, ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டர் நாகமணி, நர்ஸ் ரித்திகாவின் அலட்சியமே காரணம். கர்ப்பிணிக்கு உடனடியாக பிரசவம் பார்த்திருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்' என, குடும்பத்தினர் கூறுகின்றனர். டாக்டர், நர்ஸ் மீது மருத்துவ அதிகாரி சுனிலிடம் புகார் அளித்துள்ளனர்.
பேத்தமங்களா போலீஸ் நிலையத்திலும் உறவினர்கள் புகார் அளித்தனர்.