/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டில் தீ விபத்து ஐ.டி., பெண் ஊழியர் பலி
/
வீட்டில் தீ விபத்து ஐ.டி., பெண் ஊழியர் பலி
ADDED : ஜன 06, 2026 06:19 AM

ராமமூர்த்திநகர்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஐ.டி., பெண் ஊழியர் மூச்சுத்திணறி இறந்தார்.
மங்களூரின் காவூரை சேர்ந்தவர் ஷர்மிளா, 34. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ராமமூர்த்திநகர் சுப்பிரமணிய லே - அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தோழியருடன் வசித்தார். விடுமுறைக்காக தோழியர் ஊருக்கு சென்றதால், ஷர்மிளா மட்டும் தனியாக இருந்தார்.
கடந்த 3ம் தேதி நள்ளிரவு, ஷர்மிளா வசித்த வீட்டின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று பார்த்த போது, ஷர்மிளா இறந்து கிடந்தார். தீயால் ஏற்பட்ட புகையை சுவாசித்து மூச்சுத்திணறி அவர் இறந்தது தெரிந்தது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லைமின்கசிவா அல்லது கொசுவர்த்தி சுருளை ஏற்றி வைத்து துாங்கியதால், தீப்பொறி ஆடைகள் மீது பட்டு தீப்பிடித்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

