/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெண் எஸ்.ஐ., கைது
/
ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெண் எஸ்.ஐ., கைது
ADDED : ஜூலை 23, 2025 08:48 AM
கோவிந்தபுரா: வழக்கில் 'குற்றமற்றவர்' என்ற அறிக்கை வழங்க, லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ.,யை, லோக் ஆயுக்தா போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
எச்.பி.ஆர்., லே - அவுட்டை சேர்ந்தவர் யூனிஸ் கான். இவரும், இளம்பெண் ஒருவரும் நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்யாமல், ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன், யூனிஸ் கானுக்கு திருமணமானது, இளம் பெண்ணுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து தட்டிக்கேட்ட இளம் பெண்ணை, முகமது யூனிஸ் கான் திட்டி, தாக்கினார். இது தொடர்பாக கே.ஜி., ஹள்ளி போலீசில், முகமது யூனிஸ் மீது இளம்பெண் புகார் அளித்தார். இவ்வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மே 5ம் தேதி இளம்பெண்ணை தொடர்பு கொண்ட முகமது யூனிஸ், 'உன்னிடம் பேச வேண்டும்; வீட்டுக்கு வா' என கூறியுள்ளார்.
அவர் அங்கு சென்றபோது, கே.ஜி. ஹள்ளி போலீசில் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்கும்படி யூனிஸ் கேட்டுக் கொண்டார். இதற்கு இளம்பெண் உடன்படவில்லை. இதனால் மீண்டும் அவரை திட்டித் தாக்கினார்.
இது தொடர்பாக கோவிந்தபுரா போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
முகமது யூனிசிடம் விசாரித்த எஸ்.ஐ., சாவித்ரி பாய், இந்த புகார் தொடர்பாக முகமது யூனிசை குற்றமற்றவர் என்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமானால், லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது யூனிஸ், லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். அவர்களின் திட்டப்படி, சாவித்ரி பாயிடம் 1.25 லட்சம் ரூபாய் வழங்கினார்.
அப்போது, சாவித்ரி பாயை கையும் களவுமாக லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.