/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2025ல் காலமான திரையுலக பிரபலங்கள்
/
2025ல் காலமான திரையுலக பிரபலங்கள்
ADDED : ஜன 01, 2026 07:01 AM

'கன்னடத்து பைங்கிளி' என, அழைக்கப்படும் நடிகை சரோஜா தேவி, தன், 89வது வயதில், மூப்பு காரணமாக நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர்.
கன்னட திரையுலகில், நுாற்றுக்கணக்கான படங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் உமேஷ், 80, புற்று நோயால் அவதிப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கன்னடத்தில் பல திரைப்படங்களில், வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவர் நடிகர் ஹரிஷ் ராய், 55. இவர் தைராய்டு புற்று நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தார்.
பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ராஜு காளிகோட்டே, 62. இவர், 'பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். படப்பிடிப்பில் இருந்த போது, மாரடைப்பால் இறந்தார்.
கன்னட சின்னத்திரை தொடர்கள், நாடகங்களை இயக்கியவர் யஷ்வந்த் சரதேஷ்பாண்டே, 61. இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தன் நகைச்சுவை நடிப்பால், லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர் பேங்க் ஜனார்த்தன், 76. இவர் பல காலமாக நோயால் அவதிப்பட்டு காலமானார்.
கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான, 'திதி' திரைப்படம் மூலம், திரையுலகில் அறிமுகமானவர் சன்னேகவுடா, 89. அடுத்தடுத்த படங்களில் நடித்த இவர், உடல் நிலை பாதிப்பால் இறந்தார்.
கன்னட திரையுலகில் நடிகரும், ஆர்ட் டைரக்டராக இருந்தவரான தினேஷ் மங்களூரு, 55, 'பிரைன் ஸ்ட்ரோக்' பாதிக்கப்பட்டு காலமானார். இவர் பல திரைப்படங்களில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர்.
கன்னடத்தில் பல ஹிட் படங்களில் நடித்த சந்தோஷ் பால்ராஜ், 38. மஞ்சள் காமாலையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த, 40 ஆண்டுகளாக, கன்னட திரைப்படங்கள், டி.வி., தொடர்களில் நடித்தவர் சரிகமா விஜி, 77. இவர் 250 படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். உடல் நிலை பாதிப்பால் காலமானார்.
பெங் களூரின் கெங்கேரியில் உள்ள பி.ஜி.,யில் வசித்த, சின்னத்திரை நடிகை நந்தினி, 26, கடந்த 27 ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

