/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலாவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி
/
தர்மஸ்தலாவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி
ADDED : ஜன 01, 2026 07:00 AM

த ட்சிண கன்னடாவின் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில், மஞ்சுநாதா கோவில் உள்ளது.
இக்கோவிலில், 20 ஆண்டுகளுக்கு முன் துாய்மை பணியாளராக வேலை செய்த ஒருவர், தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, கடந்த ஜூலை மாதம் பெல்தங்கடி போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக எஸ்.ஐ.டி., எனும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், உயர் போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.
புகார் அளித்த நபர் அடையாளம் காட்டிய, 20 இடங்களில் பள்ளம் தோண்டியும், மண்டை ஓடு, எலும்பு கூடுகள் சிக்கவில்லை. இந்த நேரத்தில் புகார் அளித்தவர் முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்து இருந்ததால், அவர், 'மாஸ்க்மேன்' என்று அழைக்கப்பட்டார். இறுதியில் அந்த நபர் அளித்தது பொய் புகார் என்று தெரிந்து அவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் பெயர் சின்னையா என்று தெரியவந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார். மஞ்சுநாதா கோவிலுக்கும், கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த, சின்னையாவை ஒரு கும்பல் துாண்டி விட்டது தெரிந்தது.
சின்னையா, அவரை துாண்டி விட்ட கும்பல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடக்கிறது. புனித தலத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயன்ற சம்பவம், கர்நாடகாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

