/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காந்தாரா மூலம் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த 'சாண்டல்வுட்'
/
காந்தாரா மூலம் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த 'சாண்டல்வுட்'
காந்தாரா மூலம் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த 'சாண்டல்வுட்'
காந்தாரா மூலம் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த 'சாண்டல்வுட்'
ADDED : ஜன 01, 2026 06:58 AM

'சாண்டல்வுட்' என அழைக்கப்படும் கன்னட திரையுலகில், 2025ல் மொத்தம், 256 படங்கள் வெளியாகின. இது, புதிய சாதனையாகும்.
கமலஹாசனின், 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட கோர்ட் அனுமதி அளித்தும், சினிமா வினியோகஸ்தர்கள் யாரும் படத்தை திரையிட முன்வராததால், அப்படம் வெளியாகவில்லை.
ரஜினியின், 'கூலி' திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை துவங்கிய முதல், 30 நிமிடத்திலே பெங்களூரில், 10,000 டிக்கெட்டுகள் விற்று புதிய சாதனை படைக்கப்பட்டது. அதுபோல, முதல் நாள் டிக்கெட் 2,000 ரூபாய் வரைக்கும் விற்றது.
இந்த ஆண்டு தர்ஷனின், 'டெவில்', கிச்சா சுதீப்பின், 'மார்க்', சிவராஜ் குமார், உபேந்திரா இணைந்து நடித்த, '45', ரிஷப் ஷெட்டியின், 'காந்தாரா அத்தியாயம் 1' போன்றவை வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தின.
'காந்தாரா அத்தியாயம் 1' படம், 850 கோடி ரூபாய் வசூல் செய்து, தேசிய அளவில் பிரபலமடைந்தது. 'சு ப்ரம் சோ' 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படம், 125 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இவை இரண்டும், 2025ல், 'பிளாக் பஸ்டர்' திரைப்படங்களாகும்.
அனிமேஷன் படமான, 'மகாஅவதார் நரசிம்மர்' தேசிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
'மார்க்' திரைப்பட விழாவில், கிச்சா சுதீப் பேசிய வசனங்கள் தர்ஷனை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி, இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டனர்.
நடிகை ரம்யாவுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய தர்ஷன் ரசிகர்கள், 12 பேரை பெங்களூரு சைபர் போலீசார் கைது செய்தனர்.

