/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீசாருக்கு சவாலாக இருந்த கொள்ளையர்கள்
/
போலீசாருக்கு சவாலாக இருந்த கொள்ளையர்கள்
ADDED : ஜன 01, 2026 06:57 AM

* பீதர் டவுனில் கடந்த ஜனவரி, 16 ம் தேதி, ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்து, 93 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த காவலாளி கிரி வெங்கடேஷை, கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை இன்னும் போலீசார் தீர்க்கவில்லை.
* மங்களூரு கோட்டேகார் விவசாய கூட்டுறவு வங்கியில் கடந்த ஜனவரி, 17 ம் தேதி நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தின் திருநெல்வேலியை சோந்த முருகாண்டி, மும்பையின் ராஜேந்திரன், கண்ணன் மணி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பல இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட, 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
* தாவணகெரேயின் நியாமதி எஸ்.பி.ஐ., வங்கியில், 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், 13 கோடி ரூபாய் நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் ஆறு மாதங்களுக்கு பின், கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சகோதரர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கிணற்றில் பதுக்கிய, 13 கோடி ரூபாய் நகைகள் மீட்கப்பட்டன.
* பெங்களூரின் டெய்ரி சதுக்கம் மேம்பாலத்தில், கடந்த நவம்பர் 19ம் தேதி, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் எடுத்து செல்லப்பட்ட 7.11 கோடி ரூபாய் வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் போலீஸ்காரர் அன்னப்பா நாயக் உட்பட ஆறு பேரை, 56 மணி நேரத்தில், போலீசார் கைது செய்து பணத்தை மீட்டனர்.
* மைசூரு மாவட்டம் ஹுன்சூர் டவுனில் உள்ள நகைக்கடைக்குள் கடந்த, 28 ம் தேதி புகுந்த 5 பேர் கும்பல், துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் இன்னும் துப்புத் துலங்கவில்லை.
மைசூரு மாவட்டம் ஹுன்சூர் டவுனில் உள்ள நகைக்கடைக்குள் கடந்த, 28 ம் தேதி புகுந்த 5 பேர் கும்பல், துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி, 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் இன்னும் துப்புத் துலங்கவில்லை.

