/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூடப்படும் தியேட்டர்களை காப்பாற்ற முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு
/
மூடப்படும் தியேட்டர்களை காப்பாற்ற முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு
மூடப்படும் தியேட்டர்களை காப்பாற்ற முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு
மூடப்படும் தியேட்டர்களை காப்பாற்ற முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு
ADDED : மே 18, 2025 10:41 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மூடப்பட்டு வரும் திரையரங்குகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்க, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் திரையரங்குகள் மூடப்பட்டு, மால்களாக மாற்றப்படுவது குறித்து நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை உட்பட திரையுலக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின், திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு கூறியதாவது:
பெங்களூரில் நான் மூன்று திரையரங்குகளை நடத்தி வருகிறேன். திரைப்படங்கள் வெளியாகாமல், திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. நட்சத்திர நடிகர்கள் ஆண்டுக்கு ஒரு படம் கூட நடிப்பதில்லை. இதனாலேயே பெரும்பாலான மக்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. நட்சத்திர நடிகர்கள் அதிக திரைப்படங்கள் நடிக்க வேண்டும்.
திரையரங்குகளை காப்பாற்ற, அரசு நிதியுதவி வழங்க வேண்டும். திரையரங்குகளை சீரமைக்க 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கினாலும், இதை பெற, பல விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
எனவே, இன்று (நேற்று) நடந்த கூட்டத்தில், மின் கட்டணம், வரி குறைப்பு, மானியத்துடன் கடன் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக திரைப்பட கண்காட்சி சங்க தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:
கூட்டத்தில், ஒரு திரை கொண்ட அரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடாததால், அவைகள் இடிக்கப்பட்டு, மால்களாக கட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய திரையரங்குகளை காப்பாற்றுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
எனவே தான் நாங்களும் இதில் பங்கேற்றோம். எங்களின் கோரிக்கைகளை சிவராஜ் குமார் கவனித்தார். இன்னும் ஒரு மாதத்தில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, கன்னட சினிமாவை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
கன்னட திரையுலகம் நீடிக்க வேண்டுமென்றால், முதல்வரை சந்தித்து, நில வரி, மின் கட்டணம், குறைந்த வட்டியில் கடன் வழங்குவது உட்பட பல கோரிக்கைகள் விடுக்கப்படும். முதல்வரை சந்திக்க சிவராஜ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முதல்வரை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.