/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருட்டு வழக்கில் ஆஜராகாத திரைப்பட தயாரிப்பாளர் கைது
/
திருட்டு வழக்கில் ஆஜராகாத திரைப்பட தயாரிப்பாளர் கைது
திருட்டு வழக்கில் ஆஜராகாத திரைப்பட தயாரிப்பாளர் கைது
திருட்டு வழக்கில் ஆஜராகாத திரைப்பட தயாரிப்பாளர் கைது
ADDED : டிச 19, 2025 05:16 AM

பெங்களூரு: திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத, திரைப்பட தயாரிப்பாளர் ஹர்ஷவர்த்தன் கைது செய்யப்பட்டார்.
உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபூரில், 2017ம் ஆண்டு, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய வழக்கில், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபரும், 'நின்னல்லெனோ க்தேபாப்' என்ற கன்னட திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்த்தன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ஹர்ஷவர்த்தன், பின்னர் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தார். அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும், போலீசார் பிடியில் சிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், குடும்ப தகராறில் பிரிந்து சென்ற மனைவியான நடிகை சைத்ராவிடம் இருந்து, தனது ஒரு வயது பெண் குழந்தையை மீட்டு வர, கடந்த 7ம் தேதி தனது மனைவியை ஆள் வைத்து கடத்தினார். பேட்ராயனபுரா போலீசார் கூறியதால், மனைவியை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டார். குடும்ப தகராறு என்பதால், நீதிமன்றத்தில் பேசி தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுரை வழங்கி, ஹர்ஷவர்த்தனை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், திருட்டு வழக்கில் ஆஜராகாமல் இருந்த அவரை, நேற்று முன்தினம் சித்தாபூர் போலீசார் கைது செய்தனர். நேற்று காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

