தட்சிணகன்னடா உடுப்பியில் நிதியமைச்சர் சுற்றுப்பயணம்
தட்சிணகன்னடா உடுப்பியில் நிதியமைச்சர் சுற்றுப்பயணம்
ADDED : ஏப் 26, 2026 11:46 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்றும், நாளையும் தட்சிணகன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து, மாநில அரசு வெளியிட்ட அறிக்கை:
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், (இன்று) இரவு 7:15 மணிக்கு, தட்சிணகன்னடா மாவட்டத்தின், மங்களூரு விமான நிலையத்துக்கு வந்திறங்கிறார். அங்கிருந்து கொல்லுார் செல்கிறார்; இரவு இங்கு தங்குவார்.
நாளை காலை 11:00 மணிக்கு உடுப்பியின், ஐ.ஐ.ஜி.ஜே., கேம்பசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்கிறார். அங்கிருந்து மதியம் 2:45 மணிக்கு மங்களூரு வருகி றார். மதியம் 3:30 மணிக்கு நிட்டே பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 5:40 மணிக்கு, பெங்களூரு செல்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
