/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரிக்கெட் பார்த்தவருக்கு அபராதம்
/
கிரிக்கெட் பார்த்தவருக்கு அபராதம்
ADDED : ஏப் 05, 2025 01:22 AM
பெங்களூரு : ஸ்கூட்டர் ஓட்டியபடி, மொபைல் போனில் ஐ.பி.எல்., கிரிக்கெட் பார்த்தவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
பெங்களூரின், சின்னச்சாமி விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 2ம் தேதி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்.சி.பி., அணிகள் இடையே, ஐ.பி.எல்., போட்டி நடந்தது.
அன்றைய தினம் சிவாஜிநகரின், பிராட்வே சாலையில் பிரசாந்த் என்பவர், மின்சார ஸ்கூட்டரை ஓட்டியபடியே மொபைல் போனில், கிரிக்கெட் போட்டியை பார்த்தார்.
இதை பார்த்த சிலர், தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டனர்.போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், தகவல் கொடுத்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பிரசாந்தை கண்டுபிடித்தனர்.
அவரை நேற்று முன்தினம், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, 1,500 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

