sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தரமற்ற உணவு தயாரித்த கடைகளுக்கு அபராதம்

தரமற்ற உணவு தயாரித்த கடைகளுக்கு அபராதம்

தரமற்ற உணவு தயாரித்த கடைகளுக்கு அபராதம்


ADDED : ஜூலை 12, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 05:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்த 406 சாலையோர கடைகளின் உரிமையாளர்களுக்கு 44,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை கமிஷனர் ஸ்ரீனிவாஸ் நேற்று பெங்களூரில் அளித்த பேட்டி:

மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள பேக்கரி, சுவீட்ஸ் போன்ற ஹோட்டல்கள் அல்லாத நொறுக்கு தீனிகள் தயாரிக்கும் கடைகளில் கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், 1,557 கடைகளில் உள்ள தின்பண்டங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தரமற்ற, சுத்தமில்லாமல் இருந்த 406 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்களுக்கு 44,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், 866 சாலையோர வியாபாரிகளுக்கு இலவச பதிவு வழங்கப்பட்டு உள்ளது. தரமான உணவு தயாரிப்பது குறித்து 1,240 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 184 பஸ் நிலையங்களில் உள்ள 871 ஹோட்டல்களில் ஆய்வு நடந்தது.

இதில், தரமற்ற உணவுகளை தயாரித்த 216 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 55,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள 720 ஹோட்டல்களில் ஆய்வு நடந்தது. இதில், தரமற்ற உணவை தயாரித்த 183 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 21,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us