தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

 ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

 ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் தீ விபத்து


ADDED : ஜூலை 14, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனேக்கல்: பெங்களூரு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் தீப்பற்றியதால், புகை எழுந்தது; நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

பெங்களூரு ஆனேக்கல்லில் அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று காலை 9:30 மணிக்கு மருத்துவமனையில் முதல் மாடியில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் திடீரென தீப்பற்றி, அடர்த்தியான புகை வந்தது.

இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின், மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணியர், உள்நோயாளிகளை வராண்டாவுக்கு அழைத்து சென்றனர்.

இந்நேரத்தில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், புகை வந்த அறைக்குள் நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர். உரிய நேரத்தில், தீ அணைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us