ADDED : ஜூலை 14, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
முல்பாகல்: முல்பாகலின் ஆவனி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கிரிவலம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆவனி மலையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ராமலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிக்கபள்ளாப்பூரின் போகநந்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் கிரிவலம் போலவே, ஆவனி ராமலிங்கேஸ்வரர் கோவிலிலும், கிரி வலம் எனும் மலையை வலம் வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
