'அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு அமைச்சர் குமாரசாமியே காரணம்'
'அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு அமைச்சர் குமாரசாமியே காரணம்'
ADDED : ஜூலை 14, 2026 09:32 PM

ராம்நகர்: ''பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கான நிலத்தை ஆய்வு செய்ய சென்ற, அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு, மத்திய அமைச்சர் குமாரசாமியே காரணம்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறினார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிடதியில் டவுன்ஷிப் அமைக்க விவசாயிகள் ஒப்புக்கொண்டு, அவர்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் தான், நிலத்தை கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது நிலத்தை கையகப்படுத்த ஒரு சிலரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் திட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளனர்.
சித்தராமையா முதல்வராக இருந்த போதே, நிலம் கையக அறிவிப்பு வெளியானது. அப்போது ம.ஜ.த., தலைவர்கள் அமைதியாக இருந்தனர். சிவகுமார் முதல்வரான பின், திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த துாண்டி விடுகின்றனர்.
மண்டலஹள்ளி கிராமத்தில் நிலத்தை ஆய்வு செய்ய சென்ற, அதிகாரிகள் தாக்கப்பட்டு உள்ளனர். இதற்கு மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியே காரணம். அதிகாரிகள் தாக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், டில்லியில் இருந்து வீடியோ வெளியிடுகிறார்.
போலீசாரை மிரட்டும் தொனியில் பேசுகிறார். அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது சரி தான்.
டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த, பழைய மைசூரு பகுதிகளில் இருந்து, தன் ஆதரவாளர்களை குமாரசாமி வர வைக்கிறார்.
தோளில் பச்சை துண்டு போட்டு கொண்டு, விவசாயிகள் போல போராடுகின்றனர். கனரக தொழில் துறையை கவனிப்பதை விட்டு, மற்ற வேலைகளில் குமாரசாமி மும்முரமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
