/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தீ விபத்து: 20 கொட்டகை நாசம்
/
தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தீ விபத்து: 20 கொட்டகை நாசம்
தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தீ விபத்து: 20 கொட்டகை நாசம்
தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தீ விபத்து: 20 கொட்டகை நாசம்
ADDED : ஏப் 14, 2025 07:09 AM

கோவிந்தபுரா : தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட கொட்டகைகள் எரிந்து நாசம் அடைந்தன.
பெங்களூரு, கோவிந்தபுரா பகுதியில் உள்ள வீரண்ணபாளையா சாலை அருகே பொம்மை தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் உள்ளது. இங்கு தகர ஷீட்டுகளால் ஆன 50 கொட்டகைகள் உள்ளன. கர்நாடகாவின் பல மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ஒரு கொட்டகையில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. அருகில் உள்ள மற்ற கொட்டகைகளுக்கும் பரவத் துவங்கியது. இதையறிந்த தொழிலாளர்கள் அனைவரும் கொட்டகைகளில் இருந்து வெளியேறினர். தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏதும் நடக்கவில்லை. ஆனால், 20 கொட்டகைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. அனைத்து பொருட்களும் நாசமாகின.
தொழிற்சாலை நிர்வாக பிரதிநிதிகள், நேற்று காலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தொழிலாளர்கள் அங்கு தங்கக்கூடாது என்றும், உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தினர்.
கோவிந்தபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.