/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு - உதய்பூர் ரயில் இன்ஜினில் தீ
/
மைசூரு - உதய்பூர் ரயில் இன்ஜினில் தீ
ADDED : ஜூலை 03, 2025 11:00 PM

ராம்நகர்: மைசூரில் இருந்து உதய்பூருக்கு சென்று கொண்டிருந்த, பேலஸ் குயின் ஹும்சபார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீப்பிடித்தது.
மைசூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு, பேலஸ் குயின் ஹும்சபார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 10:05 மணிக்கு மைசூரில் இருந்து ரயில் புறப்பட்டது.
காலை 11:45 மணியளவில் ராம்நகர், சென்னப்பட்டணா ரயில் நிலையத்தை கடந்து, வந்தரகுப்பே என்ற இடத்தில் வந்தது.
அப்போது ரயில் இன்ஜினில் தீ பிடித்ததை, லோகோ பைலட், லோகோ உதவி பைலட் கவனித்தனர். உடனடியாக ரயிலை நிறுத்தினர்.
சென்னப்பட்டணா ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சென்னப்பட்டணாவில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு படையினர், ரயில் இன்ஜினில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
தீ பிடித்த இன்ஜின், ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு, பக்கத்து தண்டவாளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூரில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, ரயில் புறப்பட்டது. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு மதியம் 12:15 மணிக்கு வர வேண்டிய ரயில், மூன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 3:45 மணிக்கு வந்தது.