தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏழு கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருள் நாசம்

 ஏழு கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருள் நாசம்

 ஏழு கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருள் நாசம்


ADDED : ஜன 10, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் தாலுகாவின் கனகதாசர் சதுக்கம் அருகே வரிசையாக கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு, ஒரு கடையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்தது. இந்த தீ பக்கத்தில் இருந்த கடைகளிலும் பரவியது .

டில்லி பஜார், மொபைல் கடை, துணிக்கடை, சிக்கன் ஷாப், ஜெனரல் ஸ்டோர், கயிறு விற்பனை கடை உட்பட ஏழு கடைகளுக்கு தீ பரவி எரிந்தது.

கடைகளுக்குள் இருந்து கரும்புகை வருவதை பார் த்த அப்பகுதியினர், தீயணைப்பு படையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கடைகளில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின.எந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை, கடைகளின் உரிமையாளர்கள் கணக்கிடுகின்றனர். சிந்தனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us