/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தார்வாட் - பெங்களூரு 'வந்தே பாரத்' ரயிலில் தீ
/
தார்வாட் - பெங்களூரு 'வந்தே பாரத்' ரயிலில் தீ
ADDED : ஜூன் 28, 2025 03:08 AM

தாவணகெரே : தார்வாடில் இருந்து பெங்களூரு சென்ற 'வந்தே பாரத்' ரயிலில் தீ பிடித்தது. இதனால் தாவணகெரேயில் ரயில் நிறுத்தப்பட்டது.
தார்வாடில் இருந்து பெங்களூருக்கு நேற்று மதியம் 1:15 மணிக்கு வந்தே பாரத் ரயில் - 20662 புறப்பட்டது. இந்த ரயிலில் 500க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்தனர். மாலை 3:30 மணிக்கு ஹரிஹரா - தாவணகெரே ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது, சி1 பெட்டியின் சக்கர பகுதியில் தீப்பிடித்தது.
ரயிலில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த லோகோ பைலட்டுகள், ரயிலை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தனர். சக்கர பகுதியில் தீ பிடித்தது தெரிந்தது. இதுகுறித்து தாவணகெரே ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின், அங்கிருந்து மெதுவாக இயக்கி தாவணகெரே ரயில் நிலையத்திற்கு, ரயிலை லோகோ பைலட்டுகள் கொண்டு வந்தனர். ரயில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணம் செய்த பயணியர் அந்த வழியாக, சதாப்தி எக்ஸ்பிரசில் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் சி1 பெட்டியை ஆய்வு செய்தபோது, 'ஹாட் ஆக்சில்' பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. ரயில் சக்கர ஆக்சில் அதிகம் வெப்பம் அடைந்ததால், இந்த பிரச்னை வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.