/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலன் வைத்த தீ; சிகிச்சை பலனின்றி பெண் பலி
/
கள்ளக்காதலன் வைத்த தீ; சிகிச்சை பலனின்றி பெண் பலி
கள்ளக்காதலன் வைத்த தீ; சிகிச்சை பலனின்றி பெண் பலி
கள்ளக்காதலன் வைத்த தீ; சிகிச்சை பலனின்றி பெண் பலி
ADDED : ஜன 08, 2026 05:57 AM

பசவேஸ்வரா நகர்: மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததால், கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பெண், நேற்று உயிரிழந்தார்.
பெங்களூரு பசவேஸ்வராநகர் சானேகுருவனஹள்ளி போவி காலனியில் வசிப்பவர் கீதா, 40. கணவரை இழந்த இவர் தனது 19 வயது மகளுடன் வசித்தார்; மளிகை கடை நடத்தி வந்தார்.
கீதாவுக்கும், அவரது கடையின் அருகே டீக்கடை நடத்தும் முத்துவுக்கும், 32 பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். கடந்த சில மாதங்களாக கீதாவின் வீட்டிலேயே முத்துவும் வசித்து உள்ளார்.
அப்போது கீதாவின் மகள் மீது முத்து ஆசைப்பட்டார். அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, கீதாவை வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 2025 டிச., 24ம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த கீதா மீது பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். கீதாவின் அலறல் சத்தம் கேட்ட மகளும், பக்கத்து வீட்டினரும் அவரை மீட்டு, விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர்.
தப்பியோடிய முத்துவை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கீதா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முத்து மீது கொலை வழக்கு பதிவாகி உள்ளது.

