தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தற்கொலைக்கு முயன்ற சிறுமியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் 

 தற்கொலைக்கு முயன்ற சிறுமியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் 

 தற்கொலைக்கு முயன்ற சிறுமியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் 


ADDED : மே 22, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.ஆர்.ஐ.: ஐந்தாவது மாடியில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற 16 வயது சிறுமியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் பத்திரமாக மீட்டனர்.

பெங்களூரு என்.ஆர்.ஐ., லே - அவுட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் உள்ள மதில் சுவரில் நின்றுகொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக, நேற்று மதியம் 16 வயது சிறுமி கூறினார். இதனால், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தை சுற்றியும் பலரும் கூடினர்.

இது குறித்து, ஹொய்சாலா போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

இவர்கள் சிறுமிக்கு தெரியாதவாறு, அடுக்கு மாடி குடியிருப்பின் படிக்கட்டுகளில் ஏறினர். சத்தம் கொடுக்காமல் சிறுமியின் பின்பக்கம் சென்ற இரண்டு அதிகாரிகள் திடீரென அவரது கை, காலை பிடித்தனர்.

மதில் சுவரில் இருந்து மெதுவாக கீழே இறக்கி, தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்தனர். இதை பலரும் தங்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தனர்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசாரின் முயற்சியை பலரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us