விலங்குகளை தாக்கும் நோயை கண்டறிய முதன் முறையாக 'சி.டி., ஸ்கேன்' மையம்
விலங்குகளை தாக்கும் நோயை கண்டறிய முதன் முறையாக 'சி.டி., ஸ்கேன்' மையம்
ADDED : மார் 07, 2026 06:18 AM

கால்நடை பராமரிப்பு l 'அனுக்ரஜா' திட்டத்தின் கீழ் விபத்துகளில் உயிரிழக்கும் ஆடு, மாடுகளுக்கு வழங்கப்படும் கருணை தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 1.70 லட்சம் பயனாளிகளுக்கு 101 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது
l கால்நடை மேய்ப்பவர்களுக்கு நடக்கும் கொடூரங்களை தடுப்பதற்கு, இதுவரை, 6,702 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது
l பெலகாவி, கலபுரகியில் கால்நடை வளர்க்கும், 10,000 பயனாளிகளுக்கு மானியம் வழங்க, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l மாவட்டத்தில் உள்ள, 15 தாலுகா கால்நடை மருத்துவமனைகளை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l உள்நாட்டு ஆடு இனங்களை அதிகரிப்பதற்காக, மைசூரில் ஒரு உள்நாட்டு ஆடு இனப்பெருக்க மையம் அமைக்கப்படும்
l கால்நடை இனப்பெருக்கத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க, 5 கோடி ரூபாய் செலவில், 'ஆண்டுக்கு ஒரு கன்று' என்ற முழக்கத்துடன் மாநிலத்தின், 1,000 கிராம பஞ்சாயத்துகளில் முகாம்கள் நடத்தப்படும்
l விலங்குகளு க்கு ஏற்படும் நோயை துல்லியமாக கண்டறிய, மாநிலத்தில் முதல் முறையாக பெங்களூரு, பீதர் கால்நடை மருத்துவ கல்லுாரிகளில் கால்நடைகளுக்கான 'சி.டி., ஸ்கேன்' மையம் அமைக்கப்படும்
l பெங்களூரு மற்றும் பீதரில், 'நாய் பிறப்பு கட்டுப்பாட்டு பயிற்சி மையங்கள்' நிறுவப்படும். இது, தெரு நாய் பிரச்னையை அறிவியல் ரீதியாக தீர்க்க உதவும்.
