/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக வன படைக்கு முதல் பெண் அதிகாரி
/
கர்நாடக வன படைக்கு முதல் பெண் அதிகாரி
ADDED : பிப் 21, 2025 05:31 AM

பெங்களூரு: கர்நாடக மாநில வனப்பகுதி பாதுகாப்பு படைக்கு முதல் பெண் அதிகாரியாக, மீனாட்சி நேகியை, மாநில அரசு நியமித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மீனாட்சி நேகி. 1989ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இவர், கர்நாடகாவில் பல்லாரி, சிக்கமகளூரு, மாண்டியா உட்பட பல பகுதிகளில் மாவட்ட வனத்தறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
அதன்பின், மத்திய அரசின் ஆயுஷ் துறை இணை செயலராக பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பெண்கள் தேசிய கமிஷன் செயலராக பணியாற்றி வந்தார். தற்போது அவரை, இப்பதவியில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதையடுத்து, மாநில அரசு, அவரை கர்நாடக வனப்பகுதி பாதுகாப்பு படைக்கு முதன்மை அதிகாரியாக நியமித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின், முதன் கர்நாடக வனப்பகுதி பாதுகாப்பு படை அதிகாரி என்ற பெயர் பெற்றுள்ளார்.
வனத்துறை அதிகாரியான இவரது கணவர் விஜய் சர்மாவும், கர்நாடகா கேடரை சேர்ந்தவர். கடந்தாண்டு தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

