/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10ல் ஜி.பி.ஏ., முதல் ஆலோசனை கூட்டம்
/
10ல் ஜி.பி.ஏ., முதல் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 08, 2025 07:15 AM

பெங்களூரு : கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம், நாளை மறுநாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்கிறது.
பெங்களூரு மாநகராட்சி, தற்போது ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதன் கீழ், ஐந்து மாநகராட்சிகள் உள்ளன. ஜி.பி.ஏ., தலைவராக முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார்.
இவரது தலைமையில், வரும் 10ம் தேதி, ஜி.பி.ஏ., ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. தலைமை அலுவலகத்தின் கெம்பேகவுடா ஹாலில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
ஜி.பி.ஏ., அமலுக்கு வந்த பின் நடக்கும் முதல் கூட்டம் இது. இக்கூட்டத்தில், ஜி.பி.ஏ., துணைத் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார், பெங்களூரின் எம்.எல்.ஏ.,க்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்பர்.
நகரின் பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், ஐந்து மாநகராட்சிகளின் தேர்தல் உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.