/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரிகளில் மீன்கள் வெளியேற்றம் டெண்டர் எடுத்தவர்களுக்கு இழப்பு
/
ஏரிகளில் மீன்கள் வெளியேற்றம் டெண்டர் எடுத்தவர்களுக்கு இழப்பு
ஏரிகளில் மீன்கள் வெளியேற்றம் டெண்டர் எடுத்தவர்களுக்கு இழப்பு
ஏரிகளில் மீன்கள் வெளியேற்றம் டெண்டர் எடுத்தவர்களுக்கு இழப்பு
ADDED : அக் 27, 2025 03:40 AM

முல்பாகல்: முல்பாகல் தாலுகாவில் பெய்த கனமழையால் ஏரிகளில் உள்ள மீன்கள் அடித்து செல்லப்படுவதால், டெண்டர் எடுத்தவர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
முல்பாகல் தாலுகாவின் 436 ஏரிகளில் 35 ஏரிகள் சிறிய நீர்பாசன துறையை சேர்ந்தவை. மற்றவை, மாவட்ட பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் 90 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளன. சில ஏரிகள் நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் மழை பெய்யாததால் பல ஏரிகள் வறண்டு போயின. அப்போதைய கலெக்டர், போர்வெல்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், ஏரி நீரை விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட கூடாது என்றும் உத்தரவிட்டார். தற்போது ஏரிகள் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் ஏரி நீரை பயன்படுத்த முடியும் என்பதில் உற்சாகமாக உள்ளனர்.
முல்பாகலின் பெரும்பாலான ஏரிகளில் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளிடம் உரிமம் பெற்று, மீன் வளர்ப்பு தொழில் செய்யப்படுகிறது. கட்லா, பாம் பிளான்ட், ரோகு, காமன் கார்க், ஜிலேபி, கருமீன் போன்ற மீன் இனங்களை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரத்துக்கு மீன்களை பிடிக்க தயாராக இருந்த போது, தொடர்ந்து பெய்த மழையால், தண்ணீரில் மீன்கள் அடித்து செல்லப்பட்டன. இதை பலரும் ஆர்வத்துடன் பிடித்து செல்கின்றனர். இதை விற்று பலரும் பணம் சம்பாதிக்கின்றனர்
ஏரிகளில் எஞ்சியுள்ள மீன்களை சிலர் வலைக ளை விரித்தும், பிற சாதனங்களை பயன்படுத்தியும் பிடிக்கின்றனர். ஏரிக்கரையில் எங்கு பார்த்தாலும் மீன் பிடிப்பவர்கள் தான் காணப்படுகின்றனர். ஏரிகளில் மீன்களை வளர்க்க டெண்டர் எடுத்தவர்கள், பெரும் இழப்பை சந்தித்து உள்ளனர்.

