sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பழுதடைந்த படகு அலைகளால் பிழைத்த மீனவர்கள்

பழுதடைந்த படகு அலைகளால் பிழைத்த மீனவர்கள்

பழுதடைந்த படகு அலைகளால் பிழைத்த மீனவர்கள்


ADDED : செப் 16, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 05:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தட்சிணகன்னடா: ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற படகின் இன்ஜின் திடீரென பழுதடைந்தது. அதில் இருந்த, 13 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தட்சிணகன்னடா மாவட்டம், உல்லாலின் முக்கச்சேரி கிராமத்தில் வசிப்பவர் முகமது அஷ்வாக். இவர் மீன்பிடி தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, அரபிக்கடலுக்குள் மீன் பிடிக்க மங்களூரின் துறைமுகத்தின் தக்கேவில் இருந்து இவரது படகு புறப்பட்டது. அதில் 13 மீனவர்கள் இருந்தனர்.

நள்ளிரவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகின் இன்ஜின் பழுதடைந்தது. நள்ளிரவாக இருந்ததால் மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள், இதை கவனிக்கவில்லை. பழுதடைந்த படகில் இருந்தவர்கள், உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

ராட்சத அலைகளில் மிதந்தபடியே வந்த படகு, நேற்று அதிகாலை உல்லாலின் சீ கிரவுன்ட் என்ற இடத்தில் கடற்கரையில் தரைதட்டியது. 13 மீனவர்களும் அலைகளின் உதவியால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

படகு சேதம் அடைந்ததால், உரிமையாளருக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, உல்லால் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us