/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழைக்காலத்தை முன்னிட்டு 2 மாதங்கள் மீன் பிடிக்க தடை
/
மழைக்காலத்தை முன்னிட்டு 2 மாதங்கள் மீன் பிடிக்க தடை
மழைக்காலத்தை முன்னிட்டு 2 மாதங்கள் மீன் பிடிக்க தடை
மழைக்காலத்தை முன்னிட்டு 2 மாதங்கள் மீன் பிடிக்க தடை
ADDED : ஜூன் 05, 2025 11:25 PM
மங்களூரு: மழைக்காலம் துவங்கியுள்ளதால், இரண்டு மாதங்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் இன விருத்திக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதால், ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை இரண்டு மாதங்கள், விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக உள்ளது.
இந்த தடை உத்தரவு, தட்சிண கன்னடா, உடுப்பி, மங்களூரு, கார்வார் உட்பட துறைமுகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டுப்படகில் மீன் பிடிக்க அனுமதி உள்ளது. இதில் ஆழமான கடல் பகுதிக்கு செல்ல முடியாது. அதிகமான மீன்கள் கிடைக்காது. எனவே மீன்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை அதிகரிக்கும்.
மங்களூரு, மல்பே, கார்வார் உட்பட கடலோர துறைமுகங்களில் வெளி மாவட்டம், மாநிலங்களின் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர்.
ஒடிஷா, ஆந்திரா, ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் தொழிலாளர்கள், மீன் பிடிப்பது, மீன்களை சுமப்பது, லோட், அன்லோட் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இரண்டு மாதங்கள் வேலை இல்லை என்பதால், சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
கப்பல் உரிமையாளர்கள், மீனவர்கள் இரண்டு மாதங்களும் கப்பல்களை பழுது நீக்குவது, வலை பின்னுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருப்பர்.
மீன் பிடி துவங்கியதும் வழக்கம் போன்று, பணிகளை துவக்குவர்.