/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேறு மத நண்பருடன் பேசிய மாணவியை தாக்கிய ஐவர் கைது
/
வேறு மத நண்பருடன் பேசிய மாணவியை தாக்கிய ஐவர் கைது
ADDED : ஏப் 11, 2025 11:04 PM
சந்திரா லே - அவுட்:வேறு மதத்தை சேர்ந்த நண்பருடன் பூங்காவில் அமர்ந்து பேசிய, கல்லுாரி மாணவியை தாக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு சந்திரா லே - அவுட் பகுதியில் உள்ள பூங்காவில், கடந்த 5ம் தேதி முஸ்லிம் மதத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர், வேறு மதத்தை சேர்ந்த தன் ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர், மாணவியிடம் சென்று எதற்காக வேறு மத வாலிபருடன் பேசுகிறாய் என்று, தகராறு செய்து தாக்கினர். 'உன் பெற்றோர் மொபைல் நம்பரை கொடு. நாங்கள் பேச வேண்டும்' என்று மிரட்டினர். மாணவியின் நண்பரையும் தாக்க முயன்றனர்.
கோபம் அடைந்த மாணவி, 'நான் எனது நண்பருடன் பேசினால் உங்களுக்கு என்ன பிரச்னை' என்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு மக்கள் கூடியதால் 5 பேரும் தப்பினர். இன் சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி, சந்திரா லே - அவுட் போலீசில் புகார் செய்தார்.
வீடியோக்களில் இருந்த காட்சிகள் அடிப்படையில் மாஹிம், 22, அப்ரிதி, 23, வாசிம், 22, அஞ்சும், 21 மற்றும் 16 வயது சிறுவன் என 5 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.