/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச தமிழக காங்கிரஸில் ஐவர் குழு
/
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச தமிழக காங்கிரஸில் ஐவர் குழு
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச தமிழக காங்கிரஸில் ஐவர் குழு
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச தமிழக காங்கிரஸில் ஐவர் குழு
ADDED : நவ 23, 2025 04:12 AM
சென்னை: சட்டசபை தேர்தலில் தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, தமிழக காங்கிரசில், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., மட்டுமின்றி விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், விஜய் தலைமையில் தான் கூட்டணி என, த.வெ.க., அறிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்புவதாகவும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்ட சிலர், த.வெ.க., கூட்டணிக்கு முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
விஜயுடன் ராகுல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டது. இதனால், தி.மு.க., ஆதரவாளர்கள், காங்கிரசை சமூக ஊடகங்களில் விமர்சிக்க துவங்கினர்.
இச்சூழலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழுவை, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்துள்ளார். இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் அகில இந்திய செயலர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, காங்கிரஸ் தலைமை, 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். 'இண்டி' கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது.
அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு, இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 'விஜயுடன் பேச்சு என்ற யூகம் வதந்தி' என, சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

