
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணை முதல்வர் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, முதல்வரின் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி பரவியது. மூடநம்பிக்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என முதல்வர் சித்தராமையா கூறி வரும் நிலையில், இதற்கு நேர் எதிராக துணை முதல்வர் சிவகுமார், சனாதன தர்மத்தில் நம்பிக்கை வைத்து வழிபாடுகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்காது புரட்சி! முதல்வர் சித்தராமையா வாக்குறுதி அளித்திருந்தால், அதை நிறைவேற்றுவார். ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால், சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார். சரியான நேரத்தில், காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அதை நாங்கள் ஏற்போம். ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக, முதல்வர், துணை முதல்வரின் இல்லத்துக்கு சென்றேன். எங்கள் கட்சியில் எந்த புரட்சியும் நடக்காது. - மங்கள் வைத்யா, மாநில அமைச்சர், மீன் வளத்துறை
மேம்பாடு முடக்கம் குருபர்கள் வாக்குத் தவறி நடக்க மாட்டார்கள். சிவகுமாருக்கு, சித்தராமையா முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து, வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். 'பவர் ஷேரிங்' குழப்பத்தால், மாநிலத்தின் மேம்பாடு பாதிக்கப்படுகிறது. காங்கிரசின் குழப்பத்தை, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலையிட்டு, தீர்த்துவைக்க வேண்டும். ம.ஜ.த.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட சித்தராமையாவுக்கு, காங்கிரஸ் அடைக்கலம் கொடுத்தது. இப்போது இந்த கட்சியை ஒழித்து கட்ட அவர் முயற்சிக்கிறார். - விஸ்வநாத், எம்.எல்.சி., - பா.ஜ.,

