தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.1.28 கோடி உயர் ரக கஞ்சாவுடன் கேரளாவை சேர்ந்த ஐந்து பேர் கைது

 ரூ.1.28 கோடி உயர் ரக கஞ்சாவுடன் கேரளாவை சேர்ந்த ஐந்து பேர் கைது

 ரூ.1.28 கோடி உயர் ரக கஞ்சாவுடன் கேரளாவை சேர்ந்த ஐந்து பேர் கைது


ADDED : மே 13, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 03:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் விற்பனை செய்ய முயன்ற, 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான, உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, கேரளாவை சேர்ந்த, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரு அசோக்நகர், மல்லேஸ்வரம் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, உயர் ரக கஞ்சா என கருதப்படும், 'ஹைட்ரோ' கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற கேரளாவின் முகமது ஹம்சா, யாசிர் அகமது, முகமது அர்பான், முகமது சபீத், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்தனர்.

இருபது முதல், 25 வயதுடைய இவர்களிடம் இருந்து, 3.386 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 1.28 கோடி ரூபாய் ஆகும்.

இவர்கள் ஐந்து பேரும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி, கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறி வைத்து விற்று வந்தனர்.

கஞ்சா விற்பனை செய்வதற்காக, இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us