sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நான்கு மாடி வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து தம்பதி, 2 மகன்கள் உட்பட 5 பேர் உடல் கருகி சாவு

/

நான்கு மாடி வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து தம்பதி, 2 மகன்கள் உட்பட 5 பேர் உடல் கருகி சாவு

நான்கு மாடி வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து தம்பதி, 2 மகன்கள் உட்பட 5 பேர் உடல் கருகி சாவு

நான்கு மாடி வணிக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து தம்பதி, 2 மகன்கள் உட்பட 5 பேர் உடல் கருகி சாவு


ADDED : ஆக 16, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு கேட்: நான்கு மாடி வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி, அவர்களின் இரு மகன்கள் உட்பட 5 பேர் உடல்கருதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு, சிக்பேட் தொகுதிக்கு உட்பட்ட ஹலசூரு கேட், நகரத்பேட்டில் தங்க நகை தயாரிக்கும் பட்டறைகள், துணி மொத்த விற்பனை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கிட்டங்கி என, ஏராளமான கடைகள் உள்ளன.

அந்த இரு பகுதிகளும் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு வேலை செய்வோர் பெரும்பாலானோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்.

நகரத்பேட்டில், பிளாஸ்டிக் பாய்களை வைக்கும் கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கி நான்கு மாடி கட்டடத்தின் முதல் மாடியில் உள்ளது. இதில் வேலை செய்தவர் ராஜஸ்தான் மாநிலத்தின் மதன்குமார், 36, இவரது மனைவி சங்கீதா, 33. இவர்களின் மகன்கள் மிதேஷ், 8, விஹான், 5. இவர்கள் கட்டடத்தின் 3வது மாடியில் உள்ள சிறிய அறையில் வசித்தனர்.

குறுகலான பகுதி நேற்று அதிகாலை மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென வேகமாக பரவி கட்டடம் முழுதும் எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் தீ விபத்து சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை 4:30 மணிக்கு மேல் அந்த வழியாக சென்றவர்கள், கட்டடம் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஹலசூரு கேட் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

கட்டடம் மிகவும் குறுகலான பாதையில் இருந்ததால், தீயணைப்பு வாகனங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. கட்டடத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தண்ணீர் குழாய்களை எடுத்துக் கொண்டு கட்டடத்தை நோக்கி ஓடினர்.

சிக்கல் கட்டடத்தில் பிடித்த தீ மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் புகை மூட்டம் அதிகமாக இருந்ததால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின், பகல் 12 மணிக்கு பிறகு தான், தீயணைப்பு வீரர்களால் உள்ளே நுழைய முடிந்தது.

இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் இருந்து இரு ஆண்களின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட உடல்கள், மூன்றாவது மாடியில் இருந்த மதன்குமார், இரண்டாவது மாடியில் வசித்த சுரேஷ், 30, ஆகியோர் என்பது தெரிந்தது. மதன்குமாரின் மனைவி, இரண்டு மகன்களும் தீயில் கருகி இறந்ததும் தெரிந்தது. அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

ரூ.5 லட்சம் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு, கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான், போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் ஆகியோரும் சென்றனர். அப்பகுதி மக்களிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து தகவல் பெற்றுக் கொண்டனர்.

“உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்குவது குறித்து, அரசு முடிவு செய்யும். என் சொந்த பணத்தில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்குகிறேன்,” என, ஜமீர் அகமதுகான் அறிவித்தார்.

நகரத்பேட்டில் உள்ள கட்டடங்கள் மிகவும் நெருக்கமாக அருகருகே இருப்பதால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என, அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

வணிக கட்டடங்களில் வசிப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வீடு கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us