/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.டி., ஊழியருக்கு 'ஹனி டிராப்' 2 இளம்பெண் உட்பட ஐவர் கைது
/
ஐ.டி., ஊழியருக்கு 'ஹனி டிராப்' 2 இளம்பெண் உட்பட ஐவர் கைது
ஐ.டி., ஊழியருக்கு 'ஹனி டிராப்' 2 இளம்பெண் உட்பட ஐவர் கைது
ஐ.டி., ஊழியருக்கு 'ஹனி டிராப்' 2 இளம்பெண் உட்பட ஐவர் கைது
ADDED : டிச 25, 2025 07:17 AM

ஆர்.ஆர்.நகர்: உல்லாசமாக இருக்க அழைத்து ஐ.டி., ஊழியரிடம் 20,000 ரூபாய் பறித்ததுடன், 1 லட்சம் ரூபாய் கேட்டு அவரை காரில் கடத்த முயன்ற, இரண்டு இளம்பெண்கள் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிப்பவர், 26 வயது வாலிபர். ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். சமூக வலைதளமான, 'டெலிகிராம்' பயன்படுத்துகிறார். 'இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க இங்கு பதிவு செய்யலாம்' என்று, டெலிகிராமில் இருந்த ஒரு பதிவை பார்த்து, அதில் குறிப்பிட்டு இருந்த மொபைல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
இளம்பெண் ஒருவரது அழைப்பை ஏற்று, கடந்த 1ம் தேதி, அவருடன் உல்லாசமாக இருக்க வாலிபர் சென்றார். அவர் ஆடைகளை அவிழ்த்த போது, ஆபாசமாக புகைப்படம் எடுத்த இளம்பெண், புகைப்படத்தை காட்டி மிரட்டி வாலிபரின் மொபைல் போன் வாயிலாக, 20,000 ரூபாயை பறித்தார். ஆனாலும், அந்த வாலிபருக்கு புத்தி வரவில்லை. மீண்டும் டெலிகிராம் செயலி மூலம், இன்னொரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முன்பதிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஆர்.ஆர்.நகரில் உள்ள லாட்ஜ் அறையில் இளம்பெண்ணும், வாலிபரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த இன்னொரு பெண் உட்பட நான்கு பேர், வாலிபரை மிரட்டி 20,000 ரூபாயை பறித்தனர்.
மேலும், 1 லட்சம் ரூபாய் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அவரை காரில் கடத்தி செல்ல முயன்றனர். வாலிபர் கூச்சலிட்டார். இதனை கவனித்த லாட்ஜ் ஊழியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வாலிபரை மீட்டனர்.
அவரை கடத்த முயன்ற அஞ்சலி, 30, ஹர்ஷினி, 26, ஜெகதீஷ், 35, மஞ்சுநாத், 30, லோகேஷ், 32 ஆகியோரை கைது செய்தனர். 'ஹனி டிராப்' கும்பலை சேர்ந்த இவர்கள், டெலிகிராம் மூலம் சபல வாலிபர்களிடம் பேசி, உல்லாசமாக இருக்க வரவழைத்து பணம் பறித்தது தெரிந்தது. முதல் சம்பவத்தில் வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்த பெண்ணுக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

