sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஜனவரி 15 முதல் 26 வரை லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி

/

 ஜனவரி 15 முதல் 26 வரை லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி

 ஜனவரி 15 முதல் 26 வரை லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி

 ஜனவரி 15 முதல் 26 வரை லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி


ADDED : டிச 19, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரின் லால்பாக் பூங்காவில், வரும் ஜனவரி, 15 முதல், 26ம் தேதி வரை குடியரசு தின மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

குடியரசு தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. ஜனவரி 15 முதல், 26 வரை மலர் கண்காட்சி நடக்கும். இம்முறை பிரபல இலக்கியவாதி பூர்ணசந்திர தேஜஸ்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும்.

இவர் இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்ந்தவர். எனவே, லால்பாக் பூங்காவின் கண்ணாடி மாளிகையில், செயற்கை மலை உருவாக்கப்படும். இயற்கைக்கு நடுவில், அவரது முகம் தெரியும்படி செய்யப்படும். செயற்கை நீருற்று, நீரோடை அமைக்கப்படும். தேஜஸ்விக்கு பிடித்தமான மீன் பிடிப்பது, தேன்கூடுகள் உருவாக்கப்படும்.

நாய்கள், பறவைகள், விலங்குகள் உட்பட பல உருவங்கள் பூக்களால் உருவாக்கப்படும்.

லால்பாக் பூங்காவின், முக்கியமான இடங்களில், பூர்ண சந்திர தேஜஸ்வியின் பல விதமான ஓவியங்கள் அடங்கிய, செல்பி பாயின்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களும் அறிமுகம் செய்யப்படும். அவரது புத்தகங்கள் விற்பனை மற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும். 11 நாட்கள் வரை அவரது நாடகங்கள் மற்றும் கலந்துரையாடல் நடக்கும்.

வழக்கம் போல இம்முறையும், ரெட்ஹாட் போக்கர், ஆல்ஸ்டோரமேரியன், லில்லி, பூஷியா, அகபந்தன், சைக்ளோமன், காலா லில்லி, டியூபரஸ் உட்பட, பல விதமான குளிர் மண்டலங்களின் சிறப்பு பூக்கள் இடம் பெறும்.

மலர் கண்காட்சி, 'தேஜஸ்வி விஸ்மயா' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்படும். அவருக்கு தொடர்புடைய டிரஸ்ட், அமைப்புகள், நெருக்கமான நபர்களை சந்தித்து தேவையான தகவல்கள் பெறப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us