sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பால் வரி விதிப்பை கைவிட்டது அமெரிக்கா

/

 கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பால் வரி விதிப்பை கைவிட்டது அமெரிக்கா

 கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பால் வரி விதிப்பை கைவிட்டது அமெரிக்கா

 கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பால் வரி விதிப்பை கைவிட்டது அமெரிக்கா

9


UPDATED : ஜன 23, 2026 06:30 AM

ADDED : ஜன 23, 2026 03:45 AM

Google News

UPDATED : ஜன 23, 2026 06:30 AM ADDED : ஜன 23, 2026 03:45 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாவோஸ்: உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவற்றின் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிடுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதற்கு எட்டு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக தங்கள் நாட்டு ராணுவத்தை அங்கு அனுப்பி வைத்தன.

இதனால், கோபமடைந்த டிரம்ப் கிரீன்லாந்து கையகப்படுத்தலுக்கு எதிராக உள்ள எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது 10 சதவீத வர்த்தக வரி விதிப்பதாகவும், இது வரும், பிப்., 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார். மேலும், கிரீன்லாந்து கையகப்படுத்தும் திட்டம் கைகூடவில்லை என்றால், ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதனால், அமெரிக்கா - ஐரோப்பா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற டிரம்ப், அமைதியான முறையில் கிரீன்லாந்தை அமெரிக்கா பெறும் என்றும், இதற்காக ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்தார். மேலும், தடாலடியாக ஐரோப்பிய நாடுகள் மீது விதிக்கப்படுவதாக தெரிவித்த 10 சதவீத வர்த்தக வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

சமரசம் கிடையாது


கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதி. அதன் உரிமையை மாற்றிக் கொடுப்பது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. எங்கள் நிலத்தை விற்பது குறித்து எவ்வித பேச்சும் நடத்த நாங்கள் தயாரில்லை. மாறாக, ஆர்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார முதலீடுகள் குறித்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட டென்மார்க் தயாராக உள்ளது. டென்மார்க், தன் இறையாண்மை மற்றும் தன்னாதிக்கம் குறித்த விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது.
- மெட்டே பிரடெரிக்சன் பிரதமர், டென்மார்க்

Image 1525544

ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை

கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்பின் அச்சுறுத்தலை தொடர்ந்து, அமெரிக்காவுடனான உறவு குறித்து விவாதிக்க ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் அவசர கூட்டம் நேற்று நடந்தது. அமெரிக்காவை சார்ந்திருப்பதை விடுத்து, பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் ஐரோப்பிய யூனியன் தன் சொந்த காலில் நிற்பதற்கான ஒரு புதிய வழியை வகுப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. டிரம்ப் தற்காலிகமாக வரி விதிப்பை கைவிட்டாலும், எப்போது வேண்டுமானாலும் இத்தகைய பொருளாதார அழுத்தத்தை அவர் கொடுக்கலாம் என்பதால், அதற்கு தயாராக இருக்க ஐரோப்பிய யூனியன் விரும்புவதாக கூறப்படுகிறது.



கோல்டன் டோம் திட்டம்


உரிமையாளர் என்ற தகுதியுடன் கிரீன்லாந்தை முழுமையாக பெற வேண்டும் என்பதில் தான் இன்னமும் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நீண்டகால பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆர்டிக் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக, கிரீன்லாந்தில் 15.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 'கோல்டன் டோம்' எனும் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.



'எங்களுக்கு சம்பந்தமில்லாதது'


கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான விரிசல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று கூறியுள்ளதாவது: கிரீன்லாந்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கருத்துக் கூறுவது எங்களின் வேலை கிடையாது. இது எங்களுக்கு சம்பந்தமில்லாதது. அமெரிக்கா, டென்மார்க் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே இந்த விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், இது ரஷ்யாவுக்கு கவலையளிக்கும் விஷயம் அல்ல. இது சம்பந்தப்பட்ட நாடுகளே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us