/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூ கடைகள் இடம் மாறாது சங்க தலைவர் அரவிந்த் உறுதி
/
பூ கடைகள் இடம் மாறாது சங்க தலைவர் அரவிந்த் உறுதி
ADDED : செப் 05, 2025 11:04 PM
ஹெப்பால்: “புதிதாக கட்டப்பட உள்ள பூ மார்க்கெட்டில் கே.ஆர்., பூக்கள் மார்க்கெட்டில் உள்ள கடைகள் இடமாற்றம் செய்யப்படாது,” என, தென்னிந்திய பூ வியாபாரிகள் சங்க தலைவர் அரவிந்த் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
ஹெப்பாலில் உள்ள ஜி.கே.வி.கே., எனும் காந்தி கிருஷி விக்ஞான கேந்திரா வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவிலான பூ மார்க்கெட் கட்டப்பட உள்ளது. இது 100 கோடி ரூபாய் அளவிலான திட்டமாகும்.
இதற்காக 25 கோடி ரூபாய் நிதி மட்டும் மாநில அரசு விடுவித்துள்ளது. இங்கு பூ மார்க்கெட் கட்டுவதற்காக 900க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படாது. அப்படியே மரங்கள் வெட்டப்பட்டாலும், வேறு மரங்கள் புதிதாக நடப்படும்.
ஜி.கே.வி.கே.,க்கு அருகிலேயே ரயில், விமான நிலையங்கள் இருப்பதால் பூக்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல எளிதாக இருக்கும். இதனால், சிக்கபல்லாபூர், கோலார் பூ வியாபாரிகள் பயனடைவர்.
இங்கு கட்டப்பட உள்ள பூ மார்க்கெட்டில், கே.ஆர்., பூக்கள் மார்க்கெட்டில் உள்ள கடைகள் இடமாற்றம் செய்யப்படாது. எனவே, கே.ஆர்., பூ மார்க்கெட் வியாபாரிகள் தேவையின்றி கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.