உணவு டெலிவரி ஊழியர்கள் ஆன்லைன் புகாருக்கு வரவேற்பு
உணவு டெலிவரி ஊழியர்கள் ஆன்லைன் புகாருக்கு வரவேற்பு
ADDED : மே 11, 2026 02:38 AM
பெங்களூரு: உணவு டெலிவரி, பைக் டாக்சி ஊழியர்கள் தங்களது புகார்களை 'ஆன்லைனில்' தெரிவிக்கும் முறைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது.
கர்நாடகாவில் படித்த இளைஞர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் உணவு, உடை டெலிவரி செய்வது மற்றும் பைக் டாக்சி ஓட்டி வாழ்க்கை நடத்துகின்றனர்.
இவர்களின் பிரச்னைகளை தீர்க்க மாநில அரசு புதிய முயற்சியை முன்னெடுத்து உள்ளது. அதாவது, டெலிவரி ஊழியர்கள் தங்களது வேலை சம்பந்தமான புகார்களை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம். இந்த புகார்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
இது குறித்து, தொழிலாளர் நலன்துறை கூடுதல் கமிஷனர் மஞ்சுநாத் கூறியதாவது:
டெலிவரி ஊழியர்கள் தங்கள் வேலை தொடர்பான புகார்களை ஆன்லைனில் தெரிவிக்கும் திட்டம் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள், பைக் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இந்தியாவிலே முதல் முறையாக 'ஆன்லைனில்' டெலிவரி ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் மையம் கர்நாடகாவில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் விபரங்கள் செயலிகள் மூலம் வழ ங்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம், அவர்களின் குறைகள் தீர்க்கப்படும். தற்காலிக பணியாளர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி, டெலிவரி ஊழியர்களுக்கு வரமாய் விளங்கும்.
இதுவரை, 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர். இவர்களின் குறைகள் விரைவாக தீர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
