ADDED : ஜூன் 28, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
தங்கவயல்: ஜிம்கானா மைதானத்தில் நேற்று நடந்த கால்பந்தாட்ட இறுதி போட்டியில் கென்னடிஸ் அணி வெற்றி பெற்றது.
சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட பழமையான ஜிம்கானா மைதானம் புதுப்பிக்கப்பட்ட பிறகும் தன் தரம் மாறவில்லை. நேற்று காலை அரை இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை முதல் அரை இறுதி ஆட்டத்தில் 'பெமல்' அணியும் என்.எம்.எச்., கோரமண்டல் அணியும், விளையாடின. இதில், என்.எம்.எச்., அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அதேபோல, இரண்டாவது அரை இறுதி போட்டியில் யங் வாரியர் அணியும், கென்னடிஸ் அணியும் விளையாடியது இதில் கென்னடிஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் கென்னடிஸ் அணியும், என்.எம்.எச்., அணியும் விளையாடியது. இதில், கென்னடிஸ் அணி வெற்றிப்பெற்று கோப்பையை வென்றது.
