ADDED : ஜூலை 03, 2026 10:26 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: 'அன்று அதிகாரத்துக்காக, மேகதாது பெயரில் பாதயாத்திரை நடத்திய முதல்வர் சிவகுமார், தற்போது தமிழக காங்கிரஸ் முன், மவுனமாக இருப்பது ஏன்' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது:
மேகதாது திட்டத்தின் பெயரில், காங்கிரசார் பாதயாத் திரை என்ற வீதி நாடகம் நடத்தினர். இப்போது மவுனமாக இருப்பது ஏன்... தமிழக காங்கிரஸ் தலைவர், மேகதாதுவுக்கு ஒரு செங்கல்லையும் வைக்க விடமாட்டோம் என, கர்நாடகாவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
அன்று ஓட்டுக்காக பாதயாத்திரை நடத்தி, நாடகமாடினீர்கள். இப்போது தமிழக கூட்டணி அரசியலுக்கு பயந்து, பதுங்கி கொண்டீர்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
