தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ லட்சுமிக்கு வாழ்க்கையே சமையல் தான்!

 லட்சுமிக்கு வாழ்க்கையே சமையல் தான்!

 லட்சுமிக்கு வாழ்க்கையே சமையல் தான்!


ADDED : ஜூன் 12, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

வயிற்று பசி ஆற்ற சமையல் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த சமையல் தான் லட்சுமியின் பசியை ஆற்றியுள்ளது. 'லட்சுமி பாக்கசாலே' என்ற 'யூடியூப்' சமூக ஊடகம் வழியாக சமையலை வேகமாகவும், சுவையாகவும் செய்வது எப்படி என, இவர் விளக்குகிறார். கொப்பாலின் காரடகியை சேர்ந்த இவரின், யூடியூப் சேனலை, 18.30 லட்சம் பேர் பின்தொடர்கின் றனர். லட்சுமி கூறியதாவது:

அது, 2017 கால கட்டம். சில யூடியூப் சேனல்கள் மட்டும் தான் அப்போது இருந்தன. நான் செய்த சமையலை மொபைல் போனில் வீடியோ எடுத்து விளையாட்டாக, எனது யூடியூப் சேனலில் பதிவிட்டேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய பேர் பின்தொடர்ந்தனர். அப்போது யூடியூப்பில் இருந்து சம்பளம் கிடைக்கும் என்று கூட தெரியாது.

கடந்த, 2019ல் எனது கணவருக்கு விபத்து ஏற்பட்டு, 'கோமா' நிலைக்கு சென்றார். குடும்பத்தை நடத்த யூடியூப் சேனல் தான் வாழ்வாதாரமாக இருந்தது. நான் கற்று கொண்ட சமையலை அனைவருக்கும் சொல்லி கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் கூறும் சமையல் குறிப்புகளை, உணவு பிரியர்கள் ஏற்று கொண்டு உள்ளனர். இதுவரை, 1,700 வீடியோக்கள் பதிவிட்டு உள்ளேன்; 39 கோடி பேர் பார்த்துள்ளனர்.

சைவ, அசைவ உணவுகள், கர்நாடகாவின் வட மாவட்ட ஸ்பெஷல் உணவுகள், சப்பாத்தி, ரொட்டிக்கு 'சைடு டிஷ்' ஆக வைத்து சாப்பிடும் கிரேவிகள், பிரட் தோசை, இனிப்பு வகைகள், தின்பண்டங்கள் எப்படி செய்வது என்று 'வீடியோ' வழியாக விளக்கி உள்ளேன்.

ஒ வ்வொரு நாளும் சமையலில் புதிதாக கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு உள்ளது. சமையல் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளது. இதை ஆணித்தரமாக சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us