/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடகிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்! விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது
/
குடகிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்! விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது
குடகிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்! விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது
குடகிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்! விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது
UPDATED : ஏப் 23, 2026 05:47 AM
ADDED : ஏப் 23, 2026 04:20 AM

குடகு: குடகிற்கு சுற்றுலா வந்து, 'ஹோம் ஸ்டே'யில் தங்கியிருந்த அமெரிக்க இளம்பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பலாத்காரம் செய்த ஊழியரை காப்பாற்ற, அப்பெண்ணை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து, 'புகார் அளிக்க கூடாது' என்று மிரட்டிய ஹோம்ஸ்டே உரிமையாளர் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். கொப்பால் மாவட்டம், கங்காவதிக்கு, கடந்த ஆண்டு, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண் சுற்றுலா வந்திருந்தார். கங்காவதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த அவரும், சுற்றுலா பயணியராக வந்து, ரிசார்ட்டில் தங்கி இருந்த அமெரிக்காவின் டேனியல், மஹாராஷ்டிராவின் பங்கஜ், ஒடிசாவின் பிபாஸ் ஆகியோரும் நண்பர்களாகினர்.
இவர்கள் அனைவரையும், ரிசார்ட் பெண் உரிமையாளர், கங்காவதி அருகே சனாபுரா கிராமத்தில் ஓடும் துங்கபத்ரா இடது கால்வாய் பகுதிக்கு இரவு நேரம் அழைத்து சென்றார். அங்கு அனைவரும் கிட்டார் வாசித்து கொண்டு இருந்தனர்.
மரண தண்டனை அப்போது அங்கு வந்த ஹண்டி மல்லா, சரண் சாய், சரணபசவா ஆகியோர் ஆண் சுற்றுலா பயணியரை தாக்கி, கால்வாயில் தள்ளிவிட்டனர். பின், இரு பெண்களையும் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர். கால்வாயில் அடித்து செல்லப்பட்ட பிபாஸ், நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற இருவர் நீச்சலடித்து கரை திரும்பினர். இந்த வழக்கில் கைதான மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதேபோன்ற சம்பவம், குடகு மாவட்டத்திலும் நடந்துள்ளது. குடகு மாவட்டத்திற்கு, கோடை காலத்தில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இவர்களுக்காகவே இம்மாவட்டத்தில் ரிசார்ட்கள், ஹோம் ஸ்டேக்கள் கட்டப்பட்டு உள்ளன.
குடகு மாவட்டம், விராஜ்பேட்டையின் குட்டா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேவி வில்லா ஹோம்ஸ்டேயில், கடந்த 19ல், அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கினார். அன்றிரவு, இதே ஹோம்ஸ்டேயில் வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விரிஜேஷ் குமார், இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக, ஹோம்ஸ்டே உரிமையாளர் விஷாலிடம் இளம்பெண் புகார் தெரிவித்தார். ஆனால் அவர், இச்சம்பவத்தை மூடி மறைப்பதில் குறியாக இருந்தார். இளம்பெண்ணை, ஒரு அறையில் 2 நாட்கள் அடைத்து வைத்து, அவரின் மொபைல் போனையும் பறித்து கொண்டார்.
செய்வதறியாது இருந்த இளம்பெண்ணை, மூன்று நாட்களுக்கு பின், 'இவ்விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது' என்று மிரட்டி, அனுப்பினர். மைசூருக்கு வந்த அப்பெண், அங்கிருந்தபடி, அமெரிக்க துாதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இச்சம்பவத்தை தெரிவித்தார்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹோம்ஸ்டே உரிமையாளர் விஷால், ஊழியர் விரிஜேஷ் குமார் ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
எச்சரிக்கை
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள ஹோம் ஸ்டேக்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான செயல்பாட்டு நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஹோம் ஸ்டேக்கள் நடத்துபவர்கள், பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
உரிமம் வைத்திருப்பது முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை அனைத்து விதிகளையும் பின்பற்றுவது கட்டாயம். இந்த விதிகளை மீறி, இத்தகைய சம்பவங்கள் நடந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ச ம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே, போலீசார் நடவடிக்கையில் இறங்கி, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். அடுத்தகட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நீதித்துறை விசாரணையும் நடந்து வருகிறது.
இத்தகைய சம்பவங்கள், மாநிலத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ நல்ல பெயரை தருவதில்லை. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு எதிராக இழைக்கப்பட்டால், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். இதுபோன்ற வழக் குகளில், எந்த கருணையும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

