தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கபினி அணையில் குளித்த வனத்துறை ஊழியர் பலி

 கபினி அணையில் குளித்த வனத்துறை ஊழியர் பலி

 கபினி அணையில் குளித்த வனத்துறை ஊழியர் பலி


ADDED : ஏப் 24, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு வனத்துறை ஊழியர், கபினி அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டே தாலுகா அங்கநாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரீத், 36. வனத்துறையில் வன பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் தன்னுடன் பணியாற்றும் அய்யப்பா, அமனுடன் சேர்ந்து உத்பூர் கேட் அருகே உள்ள கபினி அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுப்ரீத், தனக்கு மிகவும் சோர்வாக உள்ளது. கரைக்கு செல்வதாக கூறி, கரைக்கு செல்ல முயற்சித்தார். மிகவும் சோர்வாக இருந்ததால், கரைக்க செல்ல முடியாமல், நீரில் தத்தளித்தார். நீரில் மூழ்குவதை பார்த்த சக ஊழியர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அத்துடன் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அதற்குள் சுப்ரீத் தண்ணீரில் மூழ்கினார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்து அவரை தேடியும் கிடைக்கவில்லை.

உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வனத்துறை உயர் அதிகாரிகள், போலீசார் வந்தனர். இட்னா கிராமத்தில் இருந்து திறமையான நீச்சல் தெரிந்தவர்களை வரவழைத்து தேடியும் பலனில்லை.

நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு அவரின் உடலை மீட்டனர். உயிரிழந்த சுப்ரீத்திற்கு மனைவி இரு குழந்தைகள் உள்ளனர். சுப்ரீத் மறைவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தரசந்தே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us