கெம்மண்ணுகுந்தியில் புலி நடமாட்டத்தால் வனத்துறை எச்சரிக்கை
கெம்மண்ணுகுந்தியில் புலி நடமாட்டத்தால் வனத்துறை எச்சரிக்கை
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 10:36 PM
சிக்கமகளூரு: பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான, கெம்மண்ணுகுந்தியில் புலி நடமாட்டம் தென்படுகிறது. இப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணியர், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிக்கமகளூரின், கெம்மண்ணுகுந்திக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர், அதிக எண்ணிக்கையில் வருகி ன்றனர். வார இறுதி நாட்களுடன், தசரா விடுமுறையும் வந்துள்ளதால், சுற்றுலா பயணியர் தங்களின் குடும்பத்தினர், நண்பர்களுடன் வருகின்றனர்.
கெம்மண்ணுகுந்தி, கல்லத்திகரி, ஹெப்பே அருவி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், புலியின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. சுற்றுலா பயணி ஒருவரின் மொபைல்போனில், புலி நடமாட்டம் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, வனத்துறையினர் பிறப்பித்த உத்தரவில், ‘சுற்றுலா பயணியர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக, இப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. சுற்றுப்புற கிராமங்களில் வசிப்போர், தனியாக நடமாட வேண்டாம்’ என்றனர்.
